×

மதுபானக் கடைகளை படிப்படியாக குறைப்போம்; புதிதாக மது குடிக்கும் இளைஞர்களை தடுக்க கவுன்சிலிங்.. அமைச்சர் முத்துசாமி பேட்டி..!!

ஈரோடு: மதுபானக் கடைகளை படிப்படியாக குறைப்போம்; 500 மதுக்கடைகளை மூடியுள்ளோம் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் வீட்டுவசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். 500 கடைகள் மூடப்பட்டுள்ளன. படிப்படியாக மதுவிலக்கை நோக்கி அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது.

மதுபானக் கடைகளை நடத்த வேண்டும் என்ற எண்ணமே, விருப்பமோ எங்களுக்கு இல்லை; அதே போல் உடனடியாக அனைத்து மதுக்கடைகளையும் மூடிவிட முடியாது. மதுவுக்கு பழக்கப்படுத்திவிட்டார்கள். படிப்படியாக தான் மூட முடியும் என்றார். டாஸ்மாக் கடைகளுக்கு புதிதாக மது வாங்க வரும் இளைஞர்களை கண்டறிந்து கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களை குடிப்பழக்கத்தில் இருந்து தடுக்க பரிசுகளும் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பிரச்சனைக்குரிய 40 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மீது புகார் வந்துள்ளது.

பிரச்சனைக்குரிய 40 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற அல்லது மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் தெரிவித்தார். மேலும், டாஸ்மாக் ஊழியர்கள் வேண்டுமென்றே எந்த தவறுகளையும் செய்யவில்லை. அங்கிருக்கும் சூழ்நிலை அப்படி இருக்கிறது. எனவே அந்த சூழ்நிலையை சரிசெய்து விட்டால் ஊழியர்கள் சரியான முறையில் செயல்பட ஆரம்பித்து விடுவார்கள் என அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். அத்திக்கடவு- அவினாசி திட்டத்தில் தண்ணீர் இல்லாததால் தற்போது தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

The post மதுபானக் கடைகளை படிப்படியாக குறைப்போம்; புதிதாக மது குடிக்கும் இளைஞர்களை தடுக்க கவுன்சிலிங்.. அமைச்சர் முத்துசாமி பேட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Muthuswamy ,Erode ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் பரபரப்பு அரசு மல்டி...